கோனேரி ராஜபுரம் என்று இன்று சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. நல்ல நகர்’ என இதனைக் குறிப்பிடுகின்றார் ஞானசம்பந்தர்.
நல்லான் நமையாள் வான் நல்ல நகரானே (85-1)
மேலும் ஒளிரும் வயல் சூழ்ந்த நல்ல நகர் ; நறைகொள் பொழில் சூழ்ந்த நல்ல நகர் என்றும் (85-4, 10) இவர் பாடுகின்றார். திருநாவுக்கரசர், நணுகு நாதனகர் திருநல்லமே (157-3) என்றும், நமக்கு நல்லது நல்லம் அடைவதே (27-4) என்றும் இதனைச் சுட்டுகின்றார். எனவே நல்லநகர் என்பதே பின்னர் நல்லம் என ஆகியிருக்குமோ எனத் தோன்றுகிறது. சேக்கிழாரும் நிலவு மாளிகைத் திருநல்லம் நீடு மாமணி எனச் சிவனைக் குறிப்பிடுகின்றார் (34-433-35). கோனேரி இராஜபுரம் அரசியல் நிலையில் பெயர் கொண்டு, இன்று இப்பெயரே செல்வாக்குடன் திகழ்கிறது.