நற்கவி

ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்று சொல்லப்படும் நால் வகைக்கவியும் ‘நற்கவி’ எனப்படும். கவிப்புலவன் இந்நற் கவி பாடும்இயல்பினனாயிருத்தல் வேண்டும் என்பது, அவனுக்குச் சொல்லிய இலக்கணத்துள்ஒன்று. (இ. வி. பாட். 178)