‘குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்,’ (மொழிமரபு 34) (நன்.105)‘சொல்லெனப் படுப பெயரே வினையென்றுஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே.’ (பெயரியல் 4) (நன்.130)‘வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாதுநினையுங் காலை காலமொடு தோன்றும், (வினயியல் 1) (ந ன். 319)‘ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும்வருவகை தானே வழக்கென மொழிப’. (பொருளியல் 28) (நன்.357)‘உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையேபலர்சொல் நடைத்தென மொழிமனார் புலவர்’, (எச்சவியல் 25) (நன்.371)‘பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே’. (கிளவியாக்கம் 51) (நன்.377)‘எண்ணுங் காலும் அதுஅதன் மரபே’. (47) (நன். 388)‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவேஇரண்டறி வதுவே அதனொடு நாவேமூன்றறி வதுவே அவற்றொடு மூக்கேநான்கறி வதுவே அவற்றொடு கண்ணேஐந்தறி வதுவே அவற்றொடு செவியே…’‘புல்லும் மரனும் ஓரறி வினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’‘நந்தும் முரளும் ஈரறி வினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’‘சிதலும் எறும்பும் மூவறி வினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’‘ஞெண்டும் தும்பியும் நான்கறி வினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’‘மாவும் மாக்களும் ஐயறி வினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ (மரபியல் 27-32) (நன்.443-448)