சந்தம் எழுத்து வகையால் இருபத்தாறு எனப்பட்ட பேதங்க ளுள் ஒன்று.ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய்யாவது பாதம் ஒன்றற்கு ஐந்தெழுத்தாகவரும் நாலடிப் பாட்டுள் நிகழ்வது.‘மன்ன னேரியன்சென்னி மானதன்கன்னி காவலன்பொன்னி நாயகன்.’ (வீ. சோ. 139 உரை)