படர்க்கைக்குரிய தம்முச்சாரியை, நந்தம்மை நுந்தம்மை எனத்தன்மையிலும் முன்னிலையிலும் வருதல் ‘ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே’(380) என்னும் இடவழுவமைதியாம். (நன். 246 சங்கர.)