இன்று பெரியார் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் இவ்வூர் பவானி என்ற பெயருடன் திகழ்கிறது.
தீங்கொன்றும் நண்ணாத் திருப்பதி ஆனதால் இதற்கு நணா என்று பெயர்’ என்பர்
ஞானசம்பந்தர் நணாவின் இயற்கைச் செழிப்பைக்
குன்றோங்கி வன்றிரைக் கண் மோத மயிலாலூம் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்களேத்தி அடிபணியும் திருநணாவே (208-1)
எனவும்,
ஆடை யொழித் தங்கமணே திரிந்துண்பா ரல்லல் பேசி
மூடு முருவ முகந்தா ருரையகற்று மூர்த்தி கோயில்
ஓடுந்தி சேரு நித்திலமு மொய்த்த கிலுங் கரையிற் சாரச்
சேடர் சிறந்தேத்தத் தோன்றி யொளி பெருகுஞ் நணாவே
எனவும் பாடுகின்றார். எனினும் இவரது பாடலினின்றும் நணா என்ற ஊர்ப்பெயர்க் காரணம் அறியவியலவில்லை. எனினும் சங்க இலக்கியம் கொண்டு, நன்றாமலையே நணாமலை என் கின்றார் மயிலை சீனி வேங்கடசாமி – மேலும் ஆறு இருந்து வளம்படுத்திய நிலையைச் சம்பந்தர் பாடுகின்றாரே தவிர வானி என்ற ஆற்றுப் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆயின் வானி என்பது தான் இப்பவானி ஆற்றின் பெயராகப் பண்டைத் தமிழ் நூற்களில் காணப்படுகிறது. பிற்காலத்தில் எப்படியோ பவானியாயிற்று. இது பெருவானியாகையால், மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் ஒரு சிற்றாற்றிற்குச் சிறுவானி என்ற பெயரும் வழங்கி வருகிறது. முன்பு பவானியானது பூவானி என்று அழைக்கப்பட்டு இருக்கலாம். பின்பு அது பவானி என மருவியிருக்கலாம் என்பது தமிழ்ப் பேராசிரியர் ஒருவரின் ஆராய்ச்சி என்றதொரு கருத்தினைக்காணும் போது பவானி என்ற ஆற்றுப்பெயர் பின்னர் ஊர்ப்பெயராக அமைந்து முற்பெயரைக் காட்டிலும் செல்வாக்குப் பெற்று, இன்றும் திகழ்கிறது என்ற எண்ணம் அமைகிறது. ஆற்றுப் பெயர்பற்றிய தனது கட்டுரையில் கி. நாச்சிமுத்து அவர்களும், ஆற்றில் விளையும் பொருளால் பெயர் பெறல் என்ற தலைப்பில் பூவானி- பவானி எனக் குறிப்பிடுவதைக் காண்கின்றோம். எனவே ஆற்றுப்பெயர் முன்பே காணப்பட்டிருக்கக் கூடும். எனினும் சம்பந்தர் காலத் துக்குப் பின்னரே ஊர்ப்பெயராக து செல்வாக்குப் பெற்றிருக்க கூடும் எனத் தோன்றுகிறது. மேலும் பவானி, காவிரியில் இவ்வூரில் இணைவதால் பவானிக் கூடல் என்ற பெயரும் இதற்கு அமைகிறது மட்டு மல்லாது, தலவிருட்சமான இலந்தை காரணபாக வதரிகா சிரமம் என்ற பெயரும் (வதரி – இலந்தை) இதற்கு உண்டு.