நட வா முதலிய இருபத்து மூன்று ஈற்றவாகிய இவை முதலாகியசொற்களெல்லாம் முன்னிலை ஏவலொருமை வினைமுற்றாகவும், ஏனைய வினைகளின்பகுதியாகவும் வரும். செய் என்னும் வாய்பாட்டின இவை.முன்னிலை ஏவலொருமை வினை ‘நடவாய்’ என்பதே கொண்டு, நட என்பதுஏவல்வினைக்குப் பகுதியே, அஃது ஏவல்வினை அன்று என்பார் சிவஞானமுனிவர்.(நன். 137)