நடவாய் வாராய் முதலிய முன்னிலை ஏவலொருமை எதிர்கால வினைமுற்றுச்சொற்கள் ஆய் விகுதி குன்றி நட வா முதலியன- வாய் நின்றன அல்லது,முதனிலைகளே ஓசைவேறுபாட்டால் முன்னிலை ஏவல் ஒருமை வினைகள் ஆகா. (சூ.வி. பக். 32)