‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ ஆதலின், அவற்றைப் பெயர் வினைஇடை உரி எனப் பாகுபாடு செய்தது, உயர்திணை அஃறிணை என்றல் தொடக்கத்தனபோலப் பொருள் வேறுபாடு பற்றிக் கருவி செய்தற் பொருட் டேயாம். அவற்றுள்குறிப்பும் பண்பும் இசையும் பற்றி வருவன எல்லாம் ஒருநிகராக, சிலவற்றைஉரிச்சொல் எனவும் சிலவற்றை வேறுசொல் எனவும் கோடல் பொருந்தாமையின்அவற்றை உரிச்சொல் என்றே கொள்ளவேண்டும். இவை குணப்பண்பு, தொழிற்பண்புஎன இரண்டாய் அடங்கும். குணப்பண்பும் தொழிற்பண்பும் ஆகிய பொருட்பண்பினைஉணர்த்தும் சொல் உரிச்சொல்லேயாம்.நடந்தான் என்புழி நடத்தலைச் செய்தான் என உருபு விரிதலின், நடஎன்பது பெயர்ச்சொல் அன்றோ எனின், நடந்தான் ஒருமொழித்தன்மைப்பட்டுநிற்றலின், அது நட வைத்தான் எனத் தன்சொல்லால் பிரித்துக் காட்டல்ஆகாமையின், நடத்தலைச் செய்தான் எனப் பிறசொல்லால் காட்டிமுடிக்கப்படும். நட என்பது தல் என்ற பகுதிப்பொருள் விகுதி பெற்றவழிப்பெயர்ச்சொல்லாம் ஆதலின், ஆண்டு உருபேற்றல் அமையும். வடநூலுள்ளும்பிரியாத் தொகை பிறசொல்லால் விரித்துக் காட்டப்படும். (சூ. வி. பக். 34- 36)