நடப்பி, நடப்பிப்பி ஏவற்பகாப்பதம்ஆகாமை

எடுத்தலோசையான் முன்னிலை ஏவலொருமை வினை முற்றுப் பகாப்பதங்களாகியநட – நடப்பி என்றாற் போல் வனவே பகுதியாம் எனவும், நடப்பிப்பி -வருவிப்பி – நடத்து விப்பி என இவை (வி பி விகுதிகள்) இணைந்துவரும்எனக் கூறியவற்றை இருமடியேவற் பகாப்பதம் எனவும், நடப்பிப் பித்தான் -வருவிப்பித்தான், நடத்துவிப்பித்தான் என்றாற் போல்வனவற்றிற்குநடப்பிப்பி முதலானவையே பகுதியாம் எனவும் கூறுவாருமுளர். அவர் கூறுவதுபொருந்தாது. என்னையெனில், அவ்வாறு கூறுவார்க்கும், நடப்பிப்பிமுதலானவை பகுதியாகுமிடத்து, அப்பொருண்மையில் திரிந்து படுத்தலோசையால்அச்செய்கைமேல் பெயர்த் தன்மைப்பட்டு வினைமாத்திரையே உணர்த்தி நிற்கும்எனக் கூறவேண்டுதலின், முன்னிலை ஏவல்வினைமுற்றுப் பகாப் பதங்கள் பகுதிஆகா என்பது உணரப்படும். மேலும் இரு முறை ஏவுதல் கூறியது கூறல் ஆதலின்அவை இழிவழக்காம். அப் பகுதிகளால் பிறந்த பகுபதங்களும் அவ்வாறே இழிவழக்காய் முடியும். (இ. வி. எழுத். 44)