நடத்து, நடத்துவி, நடத்துவிப்பி:விளக்கம்

இவ்வாய்பாடுகளுள் நடத்து வருத்து முதலியன ஏவல்வினை- முதல்இரண்டையும் இயற்றும் வினைமுதல் இரண்டையும் மூவருள் இருவர்க்கு ஒருகருத்தனையும்,நடத்துவி வருத்துவி முதலியன ஏவல் வினைமுதல் மூன்றையும் இயற்றும்வினைமுதல் மூன்றையும் நால்வருள் மூவர்க்கு ஒரு கருத்தனையும்.நடத்துவிப்பி வருத்துவிப்பி முதலியன ஏவல்வினைமுதல் நான்கையும்இயற்றும் வினைமுதல் நான்கையும் ஐவருள் நால்வர்க்கு ஒரு கருத்தனையும்,தந்து நின்றன. இங்ஙனம் இருவர்முதல் ஐவரை உள்ளுறுத்த வாய்பாடுகளைஎடுத்துக் கூறவே, வரம்பின்றி ஏவல்மேல் ஏவலும் இயற்றல்மேல் இயற்றலுமாய்வருவனவற்றிற்கு வாய்பாடு இன்று என்பதும் பெற்றாம். (நன். 138சங்கர.)