செய்யுளியலில் ஒற்றும் குற்றியலுகரமும் எழுத்தாக எண்ணப் படாததைஉட்கொண்டு, அதனை எழுத்ததிகாரத்தும் ஏற்றி, ஒற்றையும்குற்றியலுகரத்தையும் விடுத்துச் சொற்களில் எழுத்தைக் கணக்கிடு முறையைநச்சினார்க்கினியர் குறிப்பிட் டுள்ளார். ஆனால் அம் முறையை அவரேநெடுகப் பின்பற்றிலர்.ஆ, கா – ஓரெழுத்தொருமொழி; மணி, வரகு, கொற்றன் – ஈரெழுத்தொருமொழி;குரவு – மூவெழுத்தொருமொழி; கணவிரி – நாலெழுத்தொருமொழி; அகத்தியனார் -ஐயெழுத் தொரு மொழி; திருச்சிற்றம்பலம் – ஆறெழுத் தொருமொழி;பெரும்பற்றப்புலியூர்-ஏழெழுத்தொருமொழி (தொ. எ. 45 நச்.)