நகர ஈற்றுத் தொழிற்பெயர்

நகர ஈற்றுத் தொழிற்பெயர் பொருந் என்பது. அஃது அல்வழிப்புணர்ச்சிக்கண் உகரச்சாரியை பெற்றுப் பொருநுக் கடிது, பொருநு நன்று,பொருநு வலிது என்றாற் போலவும், வேற்றுமைப் புணர்ச்சிக்கண்உகரச்சாரியையே அன்றி அகரச் சாரியையும் பெற்றுப் பொருநுக்கடுமை -பொருநக்கடுமை, பொருநுநன்மை – பொருநநன்மை, பொருநுவலிமை, பொருந வலிமைஎன்றாற்போலவும் முடியும். (நன். 208)