நகர்

நகர் எனும் இவ்வடிவம் பெரிய ஊர் என்பதைக் குறிக்கப் பயன்பட்டு வரும் தொன்மையான வடிவம் ஆகும். இவ்வடிவம் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது புதிதாக ஊர்களின் அருகில் உருவாக்கப்படும் குடியிருப்புக்களுக்கு “நகர்” என்ற பொதுக்கூற்றுடன் இணைந்த சிறப்புக் கூற்று வடிவங்கள் சூட்டப்படுகின்றன. பொருண்மையளவில் இவ்வடிவம் மாற்றம் பெற்றுள்ளது.
பழனி மாநகர் (சாணா) என்ற ஊர்ப்பெயரில் “மாநகர்” என்ற கூட்டு வடிவம் வந்துள்ளது. பெருமை கருதி, “மா” என்ற அடைமொழி நகருடன் சேர்க்கப்பட்டுள்ளது. “மாநகர்” என்று ஊர்களைக் குறிப்பிடும் வழக்கம் பிற்காலப் பாண்டியர் காலத்தில் இருந்திருக்கிறது.