நகரம் எதிர்மறைப் பெயரோடு இணையும்முறை

நின்ற மொழியின் பொருளை மாற்றுதற்கு முதலில் நிறுத்திய நகரஉயிர்மெய், அப்பொருள்மொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாகில், அவ்வுயிர்ஒழிய உடல் போம். (‘அ’ என நிற்கும்) அஃது உயிராயின், நகரஉயிர்மெய்பிரிந்து உயிர் முன்னும் உடல் பின்னும் ஆம். (‘அந்’ என நிற்கும்).வரலாறு:சஞ்சலம் என நிறுத்தி, இதனை இல்லாதவன் யாவன் எனக் கருதியவிடத்து,நகர உயிர்மெய்யை முன்னே வருவித்துச் ‘சார்ந்தது உடலாயின் தன்உயிர்போம்’ என்பதனால் பிரித்து நகர ஒற்றைக் கெடுத்து, ‘அசஞ்சலன்’ எனமுடிக்க.பயம், களங்கம் என இவையும் அவ்விலக்கணத்தான் அபயன், அகளங்கன் எனமுடிக்க.உபமன் என நிறுத்தி, இதனை இல்லாதவன் யாவன் எனக் கருதியவிடத்து, நகரஉயிர்மெய்யை முன்னர் நிறுத்திச் ‘சார்ந்தது தான் ஆவியேல் தன் ஆவி முன்ஆகும்’ என்பதனால் பிரித்து அகரத்தை முன்னர் நிறுத்தி, நகரஒற்றின்மேல்உயிரை (உகரம்) ஏற்றி, அநுபமன் என முடிக்க.அகம் என்பது பாவம்; இதனை இல்லாதவன் யாவன் எனக் கருதியவிடத்து,இவ்விலக்கணத்தால் அநகன் என்க. உசிதம் என்பது யோக்கியம்; அஃது இல்லாததுஅநுசிதம் என முடிக்க.(நேமி. எழுத். 11 உரை)