நகரஈற்றுப் பொதுப்புணர்ச்சி

நகர ஈற்றுச் சொற்கள் இரண்டே. அவை வெரிந், பொருந் என்பன. இச்சொற்கள்அல்வழிக்கண் வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும் மென்கணமும்இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும் பெற்றும், யகரமும் உயிரும் வரின்இயல்பாகவும் புணரும்; வேற்றுமைப் புணர்ச்சிக்கண் உகரச் சாரியைக்குமாறாக அகரச் சாரியை பெறும். வெரிந் என்னும் சொல் வன்கணம் வருவழி நகரம்கெட்டு மெல்லெழுத்தோ வல்லெழுத்தோ பெற்றுப் புணரும். சிறுபான்மைஉருபுக்குச் செல்லும் சாரியையாகிய இன் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கும் பெறுதலுண்டு.எ-டு : பொருநுக் கடிது, பொருநு ஞான்றது, பொருநு வலிது, பொருந்யாது, பொருந் அரிது – இவை அல் வழி முடிபு. (தொ. எ. 298 நச்)பொருநக்கடுமை வெரிநக்கடுமை, பொருந ஞாற்சி, வெரிநஞாற்சி,பொருநவன்மை, வெரிநவன்மை, பொருநயாப்பு, வெரிநயாப்பு, பொருநருமை வெரிநருமை – இவை வேற்றுமை முடிபு. (299 நச்.) வெரிங்குறை வெரிஞ்செய்கைவெரிந்தலை வெரிம் புறம்; வெரிக்குறை வெரிச்செய்கை வெரித்தலைவெரிப்புறம் – வேற்றுமை முடிபு. (300, 301 நச்.)பொருநினை வெரிநினை (182 நச்.)பொருநின்குறை, வெரிநின்குறை (299 நச். உரை)