குறிலிணை – குறில்நெடில் – அடுத்த ஒற்றுக்கள் எல்லாம் நெடிலையடுத்த ஒற்றுப்போல் (வருமொழி முதலில் நகரம் வரின்) கெட்டு முடியும்;இங்ஙனம் கெட்டு முடியும் ஒற்றுக்கள் ண், ன், ம், ல், ள் – என்றஐந்தாம்.எ-டு : கோண் + நிமிர்ந்தது = கோணிமிர்ந்தது; தான் + நல்லன் =தானல்லன்; தாம் + நல்லர் = தாநல்லர்; வேல் + நன்று = வேனன்று; தோள் +நன்று = தோணன்று -என ஈறுகெட, வருமொழி நகரம், மகர ஈறு நீங்கலாக, ஏனைய இடங்களில்திரிந்தது.பசுமண் + நன்று = பசுமணன்று; முகமன் + நன்று = முகமனன்று; உரும்+ நன்று = உருநன்று; குரல் + நன்று = குரனன்று; அதள் + நன்று =அதணன்று;எனக் குறிலிணை அடுத்த ஐந்து ஈறுகளும், வருமொழி நகரம் மகர ஈறுநீங்கலாக ஏனைய நாலிடத்தும் திரிய, கெட்டன.மறான் + நல்லன் = மறானல்லன்; கலாம் + நன்று = கலாநன்று; குரால்+ நன்று = குரானன்று; எதோள் + நன்று = எதோணன்று;எனக் குறில்நெடிலை அடுத்த இவ்வொற்றுக்கள் கெட, வருமொழி நகரம், மகரஈறு நீங்கலாக ஏனைய இடங்களில் திரிந்தது.தகரமும் வருமொழி முதலில் வரின், லகர ளகர ஈறுகள் முன் திரியக்கூடியதே.எ-டு : குரல் + தீது = குரறீது; அதள் + தீது = அதடீது (தொ. எ.50 இள. உரை)‘தொடர்மொழி……. இயல’ – மாத்திரைகள் தம்முள் தொடர்ந்து நடக்கின்றசொல்லெல்லாம் நெட்டெழுத்து மாத்திரைமிக்கு நடக்கும்படியாகத் தொடர்ந்தசொல்லாம். உயிரும் உயிர் மெய்யும் அளபிறந்து இசைக்குங்கால், குறிலோநெடிலோ இசைப்பது என்ற ஐயம் நீங்க, அளபெடைக் குற்றெழுத்துநெட்டெழுத்தொடு சேர்ந்து ஒன்றாகி மாத்திரை நீண்டிசைக் கும் என்றவாறு.(நச். உரை)