‘தொடரல் இறுதி’ புணருமாறு

மூன்றெழுத்தும் அதற்கு மேற்பட்டனவும் கொண்ட சொல் தொடர்மொழியாம்.அஃது ஒன்பது எழுத்தளவும் நீளக்கூடும். பரணி : மூன்றெழுத்து;உத்தரட்டாதியான் : ஒன்பதெழுத்து. தொடர் அல்லாத இறுதி- ஈரெழுத்தையுடையசொற்க ளாகிய பல, சில என்பன.தொடரல்லாத சொல் ஓரெழுத்தொரு மொழியும் ஈரெழுத் தொரு மொழியும் ஆம்.அகர ஈற்றுள் ஓரெழுத்தொரு மொழி அகரச்சுட்டே ஆதலின், ‘தொடர் அல் இறுதி’யாவன ஓரெழுத்தொரு மொழியை விலக்கி ஈரெழுத்தொரு மொழியையே உணர்த்தின.வருமாறு : பல + பல = பலபல, பலப்பல, பற்பல, பல்பல;சில + சில = சிலசில, சிலச்சில, சிற்சில, சில்சில (தொ. எ. 214நச். உரை) (நன். 170)‘பல்’ என்னும் வேர்ச்சொல்லொடு பன்மையைக் குறிக்கும் அகரவுயிர்கூடப் பல என்றாகும். பிறசொல்லொடு கூடிய வழி அகரம் கெடப் ‘பல்’ எனநின்றே பல்யானை, பல்பொருள் என வரும்.லகரம் றகர ஒற்றாதல் – பல் + பல = பற்பலசில் + சில = சிற்சிலலகர உயிர்மெய் றகர ஒற்றாகத் திரியும் என்பதே நூற்பாவின் பொருள்.அகரம் கெட்டமைக்கு விதியின்மையின் அதனை வாராததனால் வந்தது முடித்தல்என்ற உத்திவகையான் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கொண்டனர்.லகரத்தை ஒற்றாகக் கொண்டமையான் அன்னோர் இங்ஙனம் குறிக்கவேண்டுவதாயிற்று. (எ. ஆ. பக். 137)தொல்காப்பியனார் ‘பல’ என்பது இருமொழிப் புணர்ச்சியில் ‘பல்’என்றாதலைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்:‘பல்வேறு செய்தியின்’ (சொ. 463 சேனா.)‘பன்முறை யானும்’ (சொ. 396 சேனா.)‘பல்வேறு கவர்பொருள்’ (பொ. 114 நச்.)‘பல்வேறு மருங்கினும்’ (பொ. 114 நச்.)பல்லாற்றானும் (பொ. 168 நச்.)‘பல்குறிப் பினவே’ (பொ. 286 நச்.)‘சில் வகை’, ‘பல்வகையானும்’ (பொ. 655 நச்.)இத்தொல்காப்பிய நூற்பாத் தொடர்களால், பல சில என்பன லகரமாகியஉயிர்மெய்யின் அகரம் கெட லகர ஒற்றாகிப் புணர்தல் பெற்றாம்.