‘தெரிந்து வேறு இசைத்தல்’

இச்சொற்றொடர் தொல். எழுத். 53 ஆம் நூற்பாவில் வந்துள் ளது.எழுத்துக்களைச் சொற்கு உறுப்பாக்கி ஒலிக்காமல் தனியே எடுத்துஅவ்வெழுத்துக்களின் ஓசை புலப்பட ஒலித்தல். இங்ஙனம் தனித்தெடுத்துஒலித்தாலும் அவ்வெழுத் துக்களின் இயல்பு மாறாது.எ-டு : ஆல் என்ற சொல்லிலுள்ள ஆகாரமும், தனித்து வரும். ஆ என்றஎழுத்தும் ஓசையும் மாத்திரையும் திரியா என்பது. (தொ. எ. 53 இள.உரை)ஒற்றும் குற்றுகரமும் பொருள்தரும் நிலையை ஆராய்ந்து,எழுத்ததிகாரத்துள் அவற்றை எழுத்துக்களாக எண்ணினும், மாத்திரை குறைந்துநிற்கும் நிலையை நோக்கி எழுத்தெண் ணப்படா எனச் செய்யுளியலில் வேறாகக்கூறுதல். (53 நச். உரை)