தெங்கு நிலைமொழி; காய் வருமொழி. நிலைமொழியினது முதலுயிர் நீண்டுஈற்றுயிர்மெய் கெட்டு வருமொழி புணர்ந்து தேங்காய் என முடியும். இடையேஅம்முச்சாரியை பெற்றுத் தெங்கங்காய் எனப் பொதுவிதியால் முடிதலுமுண்டு.(நன். 187)