துளுநாடு

துளுவம்‌ என்பது இந்தியாவிலிருந்த பழைய ஐம்பத்தாறு நாடுகளுள்‌ ஒன்று. கன்னட நாட்டிற்குத்‌ தெற்கிலிருத்த நாடு. மைசூர்‌ இராச்சியத்தில்‌ தென்கன்னடம்‌ என்னும்‌ மாவட்டத்‌ இல்‌ துளுநாடு என்னும்‌ பகுதியுள்ளது, துளுநாடு மிக நீண்ட காலமாக கன்னட அரசருடைய ஆட்சியில்‌ இருந்து வந்தது. மயில்கள்‌ மிக்க பொழில்களையுடைய துளுநாடு என்று சங்க இலக்கியம்‌ கூறுகிறது.
“மெய்ம்மலி பெரும்பூண்‌, செம்மற்கோசர்‌
கொம்மை அம்‌ பசுங்காய்க்‌ குடுமி விளைந்த
பாகல்‌ ஆர்கைப்‌ பறைக்‌ கட்‌ பீலித்‌
தோகைக்காவின்‌ துளுநாட்டன்ன” (அகம்‌ 15:2 5)
நாகபுரம்‌.
சாவக நாட்டிலுள்ள ஒரு நகரம்‌ புண்ணிய ராஜனின்‌ தலைநகர்‌.
”மன்னவன்‌ யாரென மாதவன்‌ கூறு
நாகபுரமிது நன்னகராள்வோன்‌
பூமிசந்திரன்‌ மகன்‌ புண்ணியராசன்‌” (மணிமே 24:168 170)