சிதம்பரம் என்ற பெயரில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள தலம் இது. தில்லை என்னும் மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் இத் தலத்திற்குத் தில்லை என்னும் பெயர் உண்டாயிற்று என்பது எளி தாகத் தெரியும் நிலை. புலிப்பாதர் என்னும் முனிவர் பூசித்தமையால் புலியூர் என்ற பெயர் உண்டு. சித் + அம்பரம் – சிதம்பரம். சித் – அறிவு அம்பரம் – வெட்டவெளி. பொன் வேயப் பெற்று ஒரு மலைபோல் ஓங்கிப் பொன் னொளி வீசி நாற்றிசையும் பரவியிருத்தலால் இத்தலத்திற்குத் தட்சிணமேரு என்னும் பெயரும் தோன்றி விளங்குகின்றது. இத்தலத்திற்குப் பூலோகக் கைலாசம் புண்டரீக புரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு. சிற்றம்பலம் என்ற பெயரின் மரூஉ சிதம்பரம் என்பர் ஊர் தில்லை எனவும் சிதம் பரம் கோயிலையும் குறித்து நிற்கிறது. எனினும், இன்று ஊரை யும் சிதம்பரம் என்று சுட்டும் வழக்கே அமைகிறது. கோயில் என்றாலே சிதம்பரம் கோயில் என்று சுட்டும் தன்மை இக்கோயி லின் மிகுந்த செல்வாக்சைத் தெரிவிக்கும் வண்ணம் அமைகின் றது. வைணவ நூல்கள் இவ்வூரைத் தெற்றி அம்பலம் என்றும், திருச்சித்திரகூடம் என்றும் குறிப்பிடுகின்றன. அனைத்துலகும் தொழும் தில்லை’ மாணிக்கவாசகர் இவ்வூரைச் சிறப்பித்துள்ளது இக்கோயில் பெருமையைச் சிறப்பாகப் பறைசாற்ற வல்லது.