திருவெஃகா

‌பாம்பணையாகிய பள்ளியில்‌ துயில்‌ கொண்ட திருமாலின்‌ திருவெஃகா” என்பது சங்க இலக்கியச்‌ செய்தி. வெஃகல்‌ என்றால்‌ விருப்பம்‌ என்றும்‌ வெஃகுதல்‌ என்றால்‌ விரும்புதல்‌ என்றும்‌ பொருள்‌ இருப்பதால்‌ “பெருமகிழ்‌ இருக்கை யாகிய அவ்விடம்‌ விருப்பம்‌ தருவது, விரும்பி உறைவதற்கேற்ற இடம்‌ என்ற கருத்தில்‌ வெஃகா எனப்‌ பெயா்‌ பெற்று, திரு என்‌ற முன்‌ ஒட்டுடன்‌ இணைந்து திருவெஃகா என நாளடைவில்‌ வழங்க இருக்கலாம்‌ என எண்ணச்‌ தோன்றுகிறது. காஞ்சிபுரத்திற்குத்‌ தென்கிழக்கே சுமார்‌ இரண்டு மைல்‌ தொலைவில்‌ உள்ளது திருவெஃகா. பிரமன்‌ செய்த வேள்வியை அழிக்க வந்த வேகவதி என்னும்‌ ஆற்றைத்‌ தடுக்கத்‌ திருமால்‌ அந்த ஆற்றின்‌ குறுக்கே அணையாகப்‌ பள்ளிகொண்டார்‌ என்பது புராணச்செய்தி. வேகவேது என்ற வடசொல்‌ வேகவணை எனத் தமிழாகி வேகணை, வெஃகனை, வெஃகா என மருவி இவ்வூரைக்‌ குறித்த தென்பர்.
நீடுகுலைக்‌
காந்தள்‌ அம்‌ சிலம்பில்‌ களிறு படிந்தாங்கு,
பாம்பணைப்‌ பள்ளி அமர்ந்தோன்‌ ஆங்கண்‌
வெயில்‌ நுழைபு அறியா, குயில்‌ நுழை பொதும்பர்‌
குறுங்காற்‌ காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்‌
பாசிலைக்‌ குறுகன்‌ புன்புற வரிப்பூ,
கார்‌ அகல்‌ கூவியர்‌ பாகொடு பிடித்த
இழைசூழ்‌ வட்டம்‌ பால்‌ கலந்தவைபோல்‌,
நிழல்‌ தாழ்‌ வார்‌ மணல்‌ தீர்‌ முகத்து உறைப்ப,
புனல்கால்‌ கழீஇய பொழில்தொறும்‌, திரள்கால்‌
சோலைக்‌ கழுகின்‌ சூல்‌ வயிற்றன்ன
நீலப்பைங்குடம்‌ தொலைச்‌சி, நாளும்‌
பெருமகிழ்‌ இருக்கை மரீஇ………” (பத்துப்‌, பெரும்பாண்‌ 371 383)