திருந்து தேவன் குடி என்று இன்றும் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. ஞானசம்பந் தர் பாடல் பெற்றது இத்தலக் கோயில். ஊர் இல்லை; ஞான சம்பந்தர் பாடல் பெற்ற இக்கோயில் மட்டும் வயலுக்கு மத்தியில் உள்ளது என்ற குறிப்பு ஊர் இருந்து, மக்கள் பிற இடங் கட்குச் சென்ற நிலையைக் காட்டுகிறது. ஞானசம்பந்தர் பாடல் இவ்வூர் பற்றிய இறைச் சிறப்பையே காட்டுகின்றது. இருப் பினும் பெரிய புராணம் இவ்வூர் குறித்துச்சுட்டும் எண்ணங்கள், திருந்து தேவன் குடியில் இருந்த சிவன் பற்றிக் கூறும் நிவை யினை இங்குக் காட்டலாம்.
செங்கண் மாலுக்கரியார் தம் திருந்து தேவன் குடிசார்ந்தார் (திருநா-294)
எனச் சேக்கிழார் சுட்டி, மேலும்
திருந்து தேவன் குடிமன்னும் சிவபெருமான் கோயில் எய்தி (திருஞான -295)
என்றும், மொய்திகழ் சோலை அம்மூதூர் முன்னகன்று (296) என்றும் கூறும் நிலையில் இது ஒரு ஊராக இருந்தது என்பது தெளிவாக விளங்குகிறது. குடி என்ற பொதுக் கூறு தடியிருப்புப் பகுதியைச் சுட்டும் தன்மையும் இங்கு இணைத்து நோக்கத்தக்கது, இறைவன் கோயில் கொண்ட நிலையில் தேவர் குடியாகி யிருக்க வாய்ப்பு அமைகிறது.