அழகு பொருந்திய நகர் அல்லது செல்வம் பொருந்திய நகர் என்ற பொருளில் திருநகர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். திருநகர் என்பது வேசாலி என்னும் அரசனுடைய நகர்.
“திருவமர் மூதூர்த் தெருவுங் கோணமும்
ஒருவழி யொழியா துயிர்நடுக்கு றீஇத்
திரிதர்வர் மாதோ திருநகரகத்தென்”.(பெருங். 1:45:95 97)
“திருநகரகவயின் திறன் மீக்கூரி
ஒருதுணை வயவருள் வழித் திரிதர” (௸. 1:46; 1 2)
“வள்ளிதழ்க் கோதை வாசவதத்தையை
உள்ளுபு திருநகர் புக்கன னுலந்தென்” (௸. 3:3; 122 123)
“ஐங்கணைக் கிழவனமர்ந்து நிலைபெற்ற
எழுதுவினைத் திருக ரெழிலுற வெய்தி” (௸. 3:4) 36 3)
“விண்மிசை யுலகன் விழவமைந்தாங்கு
மண் மிசையுலகன் மன்னிய சீர்த்தி
முழவுமலி திருநகர் விழவுவினை தொடங்க” (௸. 325; 45 47)
“பொலந் தொடி மகளிர் பொலிவொடு சூழ
வந்த பொழுதிற் கதுமென நோக்கிய
அந்த ணாளற் கணிநல னொழியப்
பெருநகர் புகழத் திருஈகர் புக்கபின்” (ஷெ. 36; 131 134)