தாவரங்களை ஒட்டியன

தாவரங்களின் மிகுதி அல்லது அருமை என்னும் காரணங்களால் தாவரப் பெயர்கள் ஊர்ப் பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்திருக்கின்றன. சிறு அளவில் இவை வழங்கின்றன. தாவரமிருக்குமிடத்தைச் சுட்டிய வடிவம், அருகில் தோன்றிய ஊரையும் தழுவு பெயராகக் காலப்போக்கில் குறித்தமையே இவை இவ்வாறு வழங்குவதற்கு அடிப்படை எனலாம். இலுப்பை, கானல், புளி எனும் தாவரப் பெயர்களும், “தளிர்” எனும் தாவர சினைப் பெயரும், “மரம்” எனும் முதற்பெயரும் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன.