‘தாழ் என் கிளவி’

தாழ் என்னும் பெயர்ச்சொல் கோல் என்னும் சொல்லொடு புணர்கையில்,இடையே அக்குச்சாரியை வருதற்கு உரித்து மாம்; எதிர்மறையும்மையான்அச்சாரியை வாராமைக்கு உரித்துமாம்.வருமாறு : தாழ் + அக்கு + கோல் = தாழக்கோல்; உம்மை-யான்,தாழ்க்கோல் எனவும் முடியும்.இத்தொகை ‘தாலிப் பொன்’ என்பது போல, தாழிற்குரிய கோல்- என விரியும்.தாழாகிய கோல் என இருபெய ரொட்டாகக் கொள்ளின், கோல் என்பது கணையமரத்தைக்குறிக்கும். தாழ்க்கோலினைத் திறவுகோல் எனக் கொண்டு தாழைத் திறக்கும்கோல் என இரண்டாவது விரித்தனர் உரையாசிரியன்மார். திறவுகோலாவதுதிறக்கும் கருவி. அதனைத் தாழ் என்றல் பொருந்தாது. (தொ. எ. 384 ச.பால.)