1. இரண்டு நெடில்கள் இணைந்து வருவது. எ-டு: தாதா2. இரண்டு நெடில்கள் இணைந்து, இறுதியில் மெல்லின ஒற்றோ இடையினஒற்றோ ஒன்று பெற்று வருவது. எ-டு: மேவான், போகார்.3. நெடில், இடையே இடையொற்று, இறுதியில் ஒரு நெடில் என்றுவருவது. எ-டு: மோர்பூ.4. நெடில், இடையின ஒற்று, நெடில், இறுதியில் மெல் லொற்றோஇடையொற்றோ ஒன்று என்று வருவது. எ-டு: சேர்மான், கூர்வேல்.5. நெடில், மெல்லொற்று, இறுதியில் மெல்லின உயிர் மெய்நெடில்அல்லது இடையின உயிர்மெய் நெடில் என்று வருவது. எ-டு: கேண்மோ,மான்வா6. நெடில், மெல்லொற்று, அடுத்து மெல்லின உயிர்மெய். நெடில்அல்லது இடையின உயிர்மெய்நெடில், இறுதியில் மெல்லொற்று அல்லதுஇடையொற்று என்று வருவது. எ-டு: மாண்மான், வான்மேல், தேன்வீண்,கூன்வாள்’ இவையாறும் தானாச் சந்தத்தின் வகைகளாம். (வண்ணத்.61-67)