‘தாந்த’ எனும் சந்தம்

1. நெடில், மெல்லொற்று, இறுதியில் வல்லின உயிர்மெய்க் குறில்என்பன. எ-டு: வேந்து.2. நெடில், மெல்லொற்று, வல்லின உயிர்மெய்க்குறில், இறுதியில்மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என்பன. எ-டு: பாங்கன், வேந்தர்.3. நெடில், இடையொற்று, மெல்லொற்று, வல்லின உயிர் மெய்க்குறில்என்பன. எ-டு: பாய்ந்து.4. நெடில், இடையொற்று, மெல்லொற்று, வல்லின உயிர் மெய்க்குறில்,இறுதியில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என்பன. எ-டு: சார்ங்கம்,சார்ங்கர்.இவை நான்கும் தாந்தச் சந்தத்தின் வகைகளாம். (வண்ணத். 38-42)