இதனை, ஞானசம்பந்தர் வணங்கிச் சென்ற தலமாகச் சேக் கிழார் குறிப்பிடுகின்றார்.
கைதொழு தேத்திப் புறத்தணைந்து காமர்பதியதன் கட்சில தோள்
வைகி என்ற வணங்கி மகிழ்ந்தணைவார் மற்றும் தவத்துறை வானவர் தாள்
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ் மாலைக் கொண்டேத்திப்போந்து
வைதிக மாமணி அம்மருங்கு மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார் (34 – 347)
ஆனைக்காவில் வணங்கிய பின்னர் இங்கு வரும் தன்மை (34-346) ஆனைக்காவிற்குப் பக்கத்தில் இத்தலம் இருக்கலாம் எண்ணத்தைத் தருகிறது. மட்டுமல்லாது. திருநாவுக்கரசரும் இ. கோயிலைக் குறிப்பிடுகின்றார்.
பண்டெழுவர் தவத்துறை வெண்டுறை (க்ஷேத்திரக்-11)
இத்தவத்துறை, பண்டெழுவர் தவத்துறை
என்று சுட்டப்படுவதால் எழுவர் சிவபிரானை நோக்கி, தவஞ் செய்து, பேறு பெற்ற தலமாதல் பற்றித் தவத்துறை என்ற பெயர் வழங் கலாயிற்று என்ற கருத்து அமைகிறது. இது இன்று லால் குடி என அழைக்கப்படுகிறது. திருவானைக்காவிற்கு 12 மைல் தொலைவில் உள்ளது என்ற எண்ணமும் அமைகிறது. எனவே மாவட்டமாக அமையலாம். இவ்வூரில் புராதனச் சிற்பத் திறம் வாய்ந்த சிவாலயமொன்று உண்டு. இக்கோயிலின் செந்நிறமான கோபுரத் தோற்றத்தைக் கொண்டு சிவப்பு ஸ்தானம் என்ற பொருளுடைய லால்குடி என்ற பெயரை இதற்கு இஸ்லாமியர் வழங்கினர் என்ற எண்ணம் லால்குடி என்ற பெயர்க் காரணம் சுட்டுகிறது. தவத்துறை என்ற ஊர் பற்றிய எண்ணம் திருநாவுக்கரசர் காலத் திலேயே அமைய, கோயில் அடிப்படையில் இப்பெயர் அமைந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. இக்கோயில் கல்வெட்டுகள் அரசியல் நிலையிலும் இக்கோயிலும் ஊரும் மிகவும் போற்றப்பட்டதைத் தெரிவிக்கின்றறன. மேலும் துறை என்று நோக்க, ஆற்றங்கரைப் பகுதியாக இருக்கலாம் என்ற எண்ணம் அமைகிறது. அருணகிரிநாதர் திருப்புகழில்,
சீரணியுந் திரை தத்தி முத்தேறி
காவிரியின் கரையொத்து மொத்திய
சீர்புனைகின்ற திருத்தவத்துறை வாழும் வாழ்வே
என்று சுட்டுவது, மேற்கண்ட கருத்தினையுறுதிப்படுத்த வல்லது