தருமபுரம்

காரைக்காலின் அருகில் உள்ள சிவத்தலம் அறக் கடவுள் வழிபட்ட தலம் காரணமாக இப்பெயர் அமைந்தது என்பர்.. கொடி மதில் சூழ் தருமபுரம் என இதனைச் சேக்கிழார் குறிப்பர். ஞானசம்பந்தர் தேவாரம் (பதி 136) சிவனின் பெருமைகளைச் சுட்டியே அமைவதால் இவ்வூர் குறித்த எண்ணங்கள் தெளிவு பெறவில்லை. எனினும் செழிப்பு மிக்க இடம் என்பது இவரது பாடலடிகள் வழி தெரிய வருகின்றன.
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
யெழில் பொழில் குயில் பயிறரும புரம்பதியே (136-1)
திருநாவுக்கரசரும் தம் பதிகத்தில் (216) தருமபுரத்துள்ளார் என இறைவனைக் குறிப்பிடுகின்றார். இன்று வரை இப்பெயரிலேயே திகழும் நிலையில் இவ்விடம் அமைகிறது.