‘தம் அகப்பட்ட’

தமக்குக் குறைந்தன; நிலைமொழி குறிப்பிடும் சொல்லுக்கு இனமானசொல்லாய், அதனைவிடக் குறைந்த அளவைக் குறிப்பிடும் பெயர்.எ-டு : நாழியே யாழாக்கு, கழஞ்சே குன்றி, ஒன்றே கால்நாழியைவிட ஆழாக்கும், கழஞ்சைவிடக் குன்றியும், ஒன்றனை விடக் காலும்(முறையே அளவு நிறை எண்ணுப் பெயராய்க்) குறைந்த அளவைக் குறிக்கின்றன.இவை உம்மைத்தொகை. இடையே வந்த ஏகாரம் சாரியை. (தொ. எ. 164 நச்.)