கருத்தாவாகிய நிலைமொழிப் பொருளான் ஆகிய (செயப் பாட்டு)வினைச்சொற்கள்.மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சியுள் ஒற்றும் உயிரும் இறுதி யாய்நின்ற சொல்முன்னர்க் கருத்தாவாகிய நிலைமொழிப் பொருள்களால் ஆகியசெயப்பாட்டு வினைச்சொற்கள் வரின், அங்ஙனம் வரும் வல்லினம் (வேற்றுமைப்பொதுமுடி பான் மிக்கு முடிதலே யன்றி) விகற்பமும் இயல்பும் ஆகும்.எ-டு : பேய் கோட்பட்டான், பேய்க் கோட்பட்டான் – உறழ்ச்சி; புலிகோட்பட்டான், புலிக் கோட்பட்டான் – உறழ்ச்சி; பேய் பிடிக்கப்பட்டான்,புலி கடிக்கப் பட்டான் – இயல்பு.இவற்றுள் தம்மினாகிய தொழில் ‘பட்டான்’ என்பதாம். கோள் என்பதுமுதலியவாய் (பிடித்தல், கடித்தல்) இடைப் பிற வருவன தம் தொழிலாம். இவ்விரண்டனையும் ஒரு சொல்லாக்கித் ‘தம்மினாகிய தொழில்’ என்றார், பட்டான்என்புழி, இது பட்டான் என்னும் பொருள் தோன்றக் கோள் என்பது முதலியனஅதனை விசேடித்து நிற்கும் ஒற்றுமை நயம் கருதி. பிடிக்கப்பட்டான்கடிக்கப்பட்டான் என்புழி, பிடிக்க கடிக்க என்னும் வினையெச்சங்கள்பட்டான் என்னும் முற்று வினை கொண்டன. இது வேற்றுமை நயம் கருதிற்று.(இவ் வினையெச்சங்கள் முறையே பேய் புலி என்னும் எழுவாய்க்குரியபயனிலைகள்; ‘பட்டான்’ சாத்தன் என்னும் எழுவாய்க்குரிய முற்றுவினை).(நன். 256 சங்கர.)எழுவாயிலும் மூன்றாம் வேற்றுமையிலும் கருத்தா உள ஆதலால், தம்தொழிலையே இங்கு ‘தம்மினாகிய தொழில்’ என்றாரெனின், ‘பேய் பிடித்தது’என்னும் எழுவாயில் ‘பேயால் பிடித்தது’ என மூன்றாம் வேற்றுமையுருபுவிரிந்து நிற்கக் கூடாமையால், தம் தொழிலும் தம்மினாகிய தொழி லும்எழுவாய்க் கருத்தாவும் மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவு மாய்த் தம்முள்வேறுபாடுடையனவாம். ஆக்கல் போக்கல் என்றாற் போல்வன எழுவாயிலே வரும்வினைமுதற்குத் தம் தொழில்; ஆக்கப்படுதல் போக்கப்படுதல் என்றாற் போல்வனமூன்றாம் வேற்றுமையிலே வரும் வினைமுதற்குரிய தம்மி னாகிய தொழில்.(நன். உருபு.17 இராமா.)