‘தம்மினாகிய தொழிற்சொல்’ புணருமாறு

தம்மினாகிய தொழிற்சொல்லாவன மூன்றாம் வேற்றுமைக் குரியவினைமுதற்பொருளான் உளவாகிய தொழிற்சொற்கள். அஃதாவது மூன்றாம்வேற்றுமைக்குரிய கருத்தா ஆகிய நிலை மொழிப் பொருள்களான் ஆகியசெயப்பாட்டு வினைச் சொற்கள்.எ-டு : புலிகோட்பட்டான்.இது புலியான் கொள்ளப்பட்டான் என்ற மூன்றாம் வேற்றுமை எழுவாயை ஏற்றசெயப்பாட்டு வினையொடு கூடிய சொற் றொடராம்.உயிரீறு புள்ளியீறு ஆகிய நிலைமொழிகளின் முன் வன்கணத் தில்தொடங்கும் இச்செயப்பாட்டு வினைச்சொற்கள் வரின், இயல்பாகவும்உறழ்ந்தும் முடியும்.எ-டு : புலி + கோட்பட்டான் = புலிகோட்பட்டான்-இயல்பு; வளி +கோட்பட்டான் = வளிகோட்பட் டான், வளிக்கோட்பட்டான் – உறழ்ச்சி; நாய் +கோட்பட்டான் = நாய் கோட்பட்டான் – இயல்புசூர் + கோட்பட்டான் = சூர்கோட்பட்டான் – இயல்பு;சூர்க்கோட்பட்டான் – உறழ்ச்சி.பேய் + கோட்பட்டான் = பேஎய்கோட்பட்டான் ,பேஎய்க்கோட்பட்டான்= எகரப்பேற்றோடு உறழ்ச்சிபாம்பு + கோட்பட்டான் = பாம்பு கோட்பட்டான், பாப்புக்கோட்பட்டான் – நிலைமொழி ஒற்றுத் திரிதலோடு உறழ்ச்சிஇது மூன்றாம் வேற்றுமையுருபு தொக்க பெயர் நிலை மொழியாய் நிற்கவரும் புணர்ச்சியை உணர்த்துகிறது. (தொ. எ. 156 நச்.) (எ. கு. பக்.159)