‘தம்இயல் கிளப்பின் தம்முன் தாம்வரூஉம் எண்ணின் தொகுதி’

நிலைமொழியும் வருமொழியுமாய் வாராது தம் முன்னர்த் தாமே வந்துநிற்கும் எண்ணுப்பெயரினது தொகுதி.பத்து என நிறுத்திப் பத்து எனத் தந்து புணர்க்கப்படாது, பப்பத்துஎனவும் பஃபத்து எனவும் வழங்கும்.இவ்வாறு பத்து + பத்து = பப்பத்து, பஃபத்து என வருதல் போல்வனஉலகத்து மருவி நடந்த வழக்கினது பகுதியைத் தமக்கு இலக்கணமாக உடையன.இவற்றின் நிலைமொழி வருமொழிப் புணர்ச்சிக்கு இலக்கணவிதி கூறப்படமாட்டாது. (தொ. எ. 482 நச்.)