தன்னுடைய செயலைக் குறிப்பிடும் ஆகார ஈற்றுத் தன்மை வினாச்சொல்.எ-டு : உண்கா. இஃது ‘யான் உண்பேனோ’ என்னும் பொருளது.ஒருகாலத்தில் ஆ – தன்மை வினாவைக் குறித்தது போலவே, ஏ ஓ – என்பனமுன்னிலை படர்க்கை வினாக்களைக் குறிக்கப் பயன்பட்டிருக்கலாம். அதன்உண்மை இப்பொழுது அறியப் படுமாறின்று. (எ. ஆ. பக். 31)தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவி வருமொழி வன்கணம் வரினும்இயல்பாகவே புணரும்.எ-டு : உண்கா கொற்றா, சாத்தா, தேவா, பூதா (தொ. எ. 224நச்.)