‘தன்குறி வழக்கம் மிகஎடுத்துரைத்தல்’

வடநூல் மேற்கோளாக ஒருமொழிகளை விதந்து பகாப்பதம் பகுபதம் எனக்காரணக்குறி தாமே தந்து, அவற்றை நல்விருந் தென நாவலர் பயில, ‘எழுத்தேதனித்தும்’ என்னும் சூத்திரம் முதலாக ‘நடவா மடிசீ’ என்னும் சூத்திரம்ஈறாகப் பகாப்பதம் பகுபதம் எனப் பலமுறை கூறல் ‘தன்குறி வழக்கம் மிகஎடுத்துரைத்தல்’ என்னும் உத்தியாம். (நன். 137 சங்கர.)