‘தத்தம் பகாப்பதங்களே பகுதி’

பெயர்ப் பகுபதங்களுள்ளும் வினைப் பகுபதங்களுள்ளும் தத்தம்முதனிலையாய் அமையும் பகாப்பதங்களே பகுதி யாகும். பகுபதத்துள் ஏனையஉறுப்புக்களும் பகாப்பதங்களே எனினும், தனித்துக் கூறும் சிறப்புடையபகாப்பதம் பெயர் வினை வேர்ச்சொற்களாகிய பகுதியே என்பது. இப்பகுதிகள்பிரித்தவழிப் பகுதியாய் உறுப்பின் பொருள் தாராமையின், இப்பகுதியையும்இடைப்பகாப்பதம் என்பர் சங். இப்பகுதி சொற்களுக்கு ஏற்பவேறுபடுதலுமுண்டு.எ-டு : செய்தான் : செய் – பகுதி; செய்வித்தான் : செய்வி -பகுதி; எழுந்தான் : எழு – பகுதி; எழுந்திருந்தான் : எழுந்திரு -பகுதி; எழுந்திட்டான் : எழுந்திடு – பகுதி (நன். 134)நட வா முதலான முதனிலைகள் எல்லாம் உரிச்சொற்கள் என்பர் சிவஞா.குணப்பண்பும் தொழிற்பண்பும் ஆகிய பொருட் பண்பை உணர்த்தும் சொல்உரிச்சொல். (சூ.வி. பக். 34)பொருட்குப் பண்பு உரிமைபூண்டு நிற்றலின், அதனை உணர்த்தும் சொல்உரிச்சொல் எனப்பட்டது. நால்வகைச் சொற்களுள் பண்புணர்த்துவனவாகியஉரிச்சொற்களே பல. (சூ.வி. பக். 35)