‘தத்தம் திரிபே சிறிய’ என்பது

அ ஆ, இ ஈ எ ஏ ஐ, உ ஊ ஒ ஓ ஒள, க் ங், ச் ஞ், ட் ண், த் ந், ப் ம்,ர் ழ், ல் ள், ற் ன் – இவை பிறக்கும் இடங்களும் முயற்சியும் ஒன்றாகஇருப்பினும், எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் என்றவாற்றானும்,தலைவளி மூக்குவளி மிடற்றுவளி என்றவாற்றானும் வேறுபடுமாறுநுண்ணுணர்வோர் கூறி உணர்தல் வேண்டும் என்பது. (தொ. எ. 88 நச்.உரை)‘தத்தம் திரிபே சிறிய என்ப’ என்ற எழுத்தொலிப் புறனடை,உயிரெழுத்துக்களின் பிறப்பைப் பற்றிய நூற்பாக்களை அடுத்துள்ளது.இதனைச் சிங்கநோக்காக, முன்னர்க் கூறிய உயிர்க்கும் பின்னர்க் கூறும்மெய்க்கும் கொள்வர் இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும்.மெய்யெழுத்துக்களின் பிறப்பைக் கூறுமிடத்து இரண்டிரண்டுஎழுத்துக்களைச் சேர்த்துக் கூறுகிறார் தொல். ஆயினும் மெல்லெழுத்துஆறற்கும் மூக்குவளி வேறுபாடே யன்றி இடவேறுபாடு இன்மையானும்,லளக்களுக்கு முயற்சிவேறுபாடு கூறியிருத்த லானும், இ ஈ எ ஏ ஐ – உ ஊ ஒ ஓஒள – இவற்றின்கண் சிறிது முயற்சி வேறுபாடு உண்மையானும், உயிரொலிவேறுபாடு களைக் குறிக்கத் ‘தத்தம் திரிபே சிறிய என்ப’ என்ற புறனடைகூறப்பட்டது. இது சிங்கநோக்காய் மெய்க்கும் புறனடை ஆகாது. (எ. ஆ. பக்.79)எழுத்ததிகாரக் குறிப்புரையாசிரியரது கருத்தும் இதுவே.(எ. கு. பக். 92)