தங்கால்‌,

தங்கால்‌ என்பது பாண்டி நாட்டிலுள்ள ஓரூர்‌. திருத்தங்காலூர்‌ என இன்று வழங்குகிறது. இவ்வூர்‌ பாண்டியனால்‌ வார்த்திகனுக்குப்‌ பிரமதேயமாக வழங்கப்பெற்றது. பூட்கோவலனார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ இவ்வூரைச்‌ சேர்ந்தவர்‌,
“செங்கால்‌ தென்னன்‌ திருந்து தொழில்‌ மறையவர்‌
தங்கால்‌ என்பதூரே அவ்வூர்ப்‌
பாசிலை பொதுளிய பேரதிமன்றத்துத்‌
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்‌
பண்டச்‌ சிறுபொதி பாதக்‌ காப்பொடு
களைந்தனன்‌ இருப்போன்‌ காவல்‌ வெண்குடை,
விளைந்துமுதிர்‌ கொற்றத்து விறலோன்‌ வாழி:’ (சிலப்‌, 23:74.80)
“அறியா மாக்களின்‌ முறைதிலை திரித்தவென்‌
இறைமுறை பிழைத்தது பொறுத்தல்‌ நுங்‌ கடனெனத்‌
தடம்புனற்‌ கமனித்‌ தங்கால்‌ தன்னுடன்‌
மடங்கா விளையுள்‌ வயலூர்‌ நல்‌கி”” (௸. ௸. 116 119)