அதியமான் நெடுமான் அஞ்சி என்ற வள்ளலின் தலை நகரரய் இருந்த ஊர் தகடூர். சேலம் மாவட்டத்திலுள்ள இன்றைய தருமபுரியே தகடூர் என்று கருதுகின்றனர். தருமபுரி சேலம் மாவட்டத்தில் ஓமலூர், ஓசூர் வட்டங்களுக்கு இடையிலுள்ள ஒரு வட்டம். இங்கு 9 10 ஆம் நூற்றாண்டு முதல் கல்வெட்டுகள் இடைக்கின்றன, அக்காலத்து இதனை நுளம்பபல்லவர்கள் ஆண்டனர் “என்று தெரிகிறது. 1178 ஆம் ஆண்டிலும், அதற்கு அடுத்த ஆண்டிலும் மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. பிறகு விஜய நகரக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
“பல் பயன் நிலைஇய கடறுடைய வைப்பின்
வெல் போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில் பயில் இறும்பின், தகடூர் நாறி” (பதிற் 78:7 9)
“தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய
அருந்திறல் ஒள் இசைப் பெருஞ் சேரல் இரும்பொறையை” (ஷே. 8. ஆம்பத்து பதிகம். 9 10)