செய்யுளில் (லகரமெய் திரிந்த னகரத்தை அடுத்து வரும் மகரம் தனது அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரை யாக ஒலித்தலேயன்றி) ளகரமெய்திரிந்த ணகரத்தை அடுத்து வரும் மகரமும் தனது மாத்திரையின் குறுகிக்கால்மாத்திரை யாக ஒலிக்கும் (தன்னின முடித்தல் என்னும் உத்தியால்இம்மகரக் குறுக்கம் கொள்ளப்பட்டது).எ-டு : (போலும் > போல்ம் – போன்ம்) மருளும் > மருள்ம் – மருண்ம். (தொ. எ. 52 நச். உரை)