ணகரஈற்றுப் புணர்ச்சி

ணகர ஈற்றுப் பெயர், வன்கணம் வரின், வேற்றுமைப் புணர்ச்சியாயின்ணகரம் டகரமாகத் திரியும்; ஏனைய கணம் வரின் இயல்பாகப் புணரும்.எ-டு : மண் + குடம் = மட்குடம்; மண் + சாடி = மட்சாடி; மண் +தூதை = மட்டூதை; மண் + பானை = மட்பானை – வன்கணம் வர, ணகரம்டகரமாயிற்று.மண்ணெகிழ்ச்சி, மண்மாட்சி; மண்யாப்பு, மண்வலிமை – என மென்மையும்இடைமையும் வர இயல்பாயிற்று. உயிர்க்கணம் வரின், மண் + அடைவு =மண்ணடைவு என, தனிக்குறில் முன் ஒற்றிரட்டிப் புணரும். (தொ. எ. 148நச்.)இரண்டாம்வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின், ஈறு திரியாது,மண்கொணர்ந்தான், மண் கை என இயல்பாகப் புணரும். (302 நச்.)ஆண் பெண் என்ற பொதுப்பெயர்கள், எப்பொழுதும் அஃறிணைப்பெயர்அல்வழியில் புணருமாறு போல, வேற்றுமைப்புணர்ச்சியிலும் இயல்பாகப்புணரும். (303 நச்.)எ-டு : ஆண் கை, பெண் கைஆண் என்ற மரப்பெயர் அம்முச்சாரியை பெற்று வருமொழி யொடுபுணரும்.எ-டு : ஆணங்கோடு, ஆணநார், ஆணவலிமை, ஆண வடைவு (வகரம்உடம்படுமெய்) (304 நச்.)விண் என்ற ஆகாயத்தின் பெயர் அத்துச்சாரியை பெற்றும், அதனொடு வகரம்பெற்றும் சாரியை இன்றியும் புணரும் இம்முடிபு செய்யுட்கண்ணது.எ-டு : விண்ணத்துக் கொட்கும் (அத்து)விண்வத்துக் கொட்கும் (வ் + அத்து)‘விண்குத்து நீள்வரை’ (இயல்பு) (305 நச்.)ணகார ஈற்றுத் தொழிற்பெயர், அல்வழி வேற்றுமை இரு வழியும், வன்கணம் வரின் உகரமும்வல்லெழுத்தும் பெற்றும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரம்பெற்றும், யகரமும் உயிரும் வரின் இயல்பாகவும் புணரும்.எ-டு : மண்ணுக் கடிது, மண்ணுக்கடுமை; மண்ணு ஞான்றது,மண்ணுஞாற்சி; மண்ணு வலிது, மண்ணு வன்மை; மண் யாது, மண்யாப்பு;மண்ணரிது; மண்ணருமை (உயிர் வருவழிச் தனிக்குறில் முன் ஒற்றுஇரட்டும்); மண் – கழுவுதல் என்னும் பொருளது. (306 நச்.)உமண் என்ற ணகாரஈற்றுக் கிளைப்பெயர் உமண்குடி – உமண்சேரி – என்றாற்போல இயல்பாகப்புணரும்.கவண்கால், பரண்கால் என்பன இயல்பாகப் புணரும்.மண்ணப்பத்தம், எண்ணநோலை – என்பன அக்குச்சாரியை பெறும்.அங்கண் இங்கண் உங்கண் எங்கண், ஆங்கண் ஈங்கண் ஊங்கண் யாங்கண்,அவண் இவண் உவண் எவண் என்ற ணகார ஈற்று ஏழாம் வேற்றுமை ப் பொருள் உணரநின்ற இடைச்சொற்கள் ஈற்று ணகரம் டகரமாகிப்புணரும். இவ்விடைச்சொற்கள் பெயர்ச்சொல் நிலையின.எ-டு : அங்கட்கொண்டான் …………… எங்கட் கொண்டான்ஆங்கட் கொண்டான் …………. யாங்கட் கொண்டான்அவட் கொண்டான் …………….. எவட்கொண்டான்(307 நச்.)‘எண்’ என்ற உணவு எள்ளின் பெயர் அல்வழிக்கண் இயல்பாகவும்திரிந்தும், வேற்றுமைக்கண் திரிந்தும் வருமொழி வன்கணத்தொடுபுணரும்.எ-டு : எண் கடிது, எட்கடிது; எட்கடுமை (308 நச்.)முரண் என்ற தொழிற்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் ணகரம்டகரமாகத் திரிந்தும் உறழ்ச்சி பெற்றும் புணரும். அல்வழிக்கண்இயல்பாகப் புணரும்.எ-டு : முரட்கடுமை, முரட்பெருமை – என்ற திரிபும்முரண்கடுமை முரட்கடுமை, அரண்கடுமை அரட்கடுமை என்ற உறழ்ச்சியும்கொள்ளப்படும்.இனி அல்வழிக்கண், முரண்கடிது, சிறிது, தீது, பெரிது; நெகிழ்ந்தது,நீண்டது, மாண்டது; வலிது, யாது; அழகிது – என நாற்கணத்தும் இயல்பாகமுடிந்தது. (309 நச்.)உருபுபுணர்ச்சிக்கண் மண்ணினை, மண்ணை என இன்சாரியை பெற்றும்பெறாமலும் வரும். (202 நச்.)அல்வழிக்கண் ணகர ஈற்றுப்பெயர் நாற்கணம் வரினும் இயல்பாகப்புணரும்.எ-டு : மண் கடிது, மண் சிறிது, மண் தீ(டீ)து, மண் பெரிது;மண் ஞான்றது, மண் ணீண்டது, மண் மாண்டது;மண் யாது, மண் வலிது; மண்ணழகிது (தனிக்குறில் முன் ஒற்றாதலின்உயிர்வர இரட்டியது) (147 நச்.)ணகர ஈறு அல்வழிப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரினும் இயல்பாகப்புணரும்.எ-டு : மண் கடிது, எண் சிறிது (நன். 209)வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் நிலைமொழி யீற்று ணகரம்டகரமாகத் திரியும்; பிறகணம் வரின் இயல்பாம்.எ-டு : மண் + குடம் = மட்குடம்மண் + ஞாற்சி, யாப்பு, அழகு = மண்ஞாற்சி, மண்யாப்பு, மண்ணழகு(நன். 209)தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகரம் வருமொழி நகரம் ணகரமாகத்திரிந்தவழித் தான் கெடும். இருவழியும் இம்முடிபு கொள்க.எ-டு : ஆண் + நல்லன், நன்மை = ஆணல்லன், ஆணன்மைபரண் + நன்று, நன்மை = பரணன்று, பரணன்மைபசுமண் + நன்று, நன்மை = பசுமணன்று, பசுமணன்மை (நன்.210)பாண் என்ற சாதிப்பெயர், உமண் என்ற குழூஉப்பெயர், பரண் கவண் – என்றபெயர்கள் போல்வன வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.எ-டு : பாண்குடி, உமண்சேரி, கவண்கால், பரண்கால்உணவு எண் (எள்), சாண் – என்பன வன்கணம் வரின் இருவழி யும் ணகரம்இயல்பாதலும் டகரமாதலும் ஆகிய உறழ்ச்சி பெறும்.எ-டு : எண்கடிது எட்கடிது, எண்கடுமை எட்கடுமை;சாண்கோல் சாட்கோல், சாண்குறுமை சாட்குறுமைபாண் அகரச்சாரியை பெற்றுப் பாண் + குடி = பாணக்குடி எனவரும்.அட்டூண்து(டு)ழனி என இயல்பும், மண்குடம் மட்குடம் என்ற உறழ்வும், இன்னபிறவும் கொள்க. (நன். 211 சங்கர.)