டு று ஆகிய குற்றியலுகர ஈறுகள்உருபேற்குமாறு

டு று ஆகிய குற்றியலுகரஈற்றுச் சொற்கள் முறையே டகரறகர ஒற்றுக்கள்இடையே மிக்கு உருபேற்றலும், இன்சாரியை பெற்று உருபேற்றலும் உள.எ-டு : யாடு + ஐ = யாட்டை, யாட்டினையாறு + ஐ = யாற்றை, யாற்றினை(தொ. எ. 196, 197 நச்.)