டு று ஆகிய குற்றியலுகர ஈறுகள்வேற்றுமை அல்வழிப்புணர்ச்சி

டு று ஆகிய குற்றியலுகர ஈற்று ஈரெழுத்து மொழியும் உயிர்த் தொடர்மொழியும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் இனமாகிய ஒற்று இடையே மிகவன்கணம் வரின் வல்லெழுத்து மிகும்; ஏனைக்கணம் வரின் இனஒற்று இடையேமிக்கு இயல்பாக முடியும்.எ-டு : யாடு + கால் = யாட்டுக்கால்; பாறு + சினை = பாற்றுச்சினை; முயிறு + சினை = முயிற்றுச்சினை. (தொ. எ. 411 நச்.) யாடு +ஞாற்சி = யாட்டுஞாற்சி; முயிறு + ஞாற்சி = முயிற்றுஞாற்சி; பாறு +வலிமை = பாற்று வலிமை; முயிறு + வலிமை = முயிற்றுவலிமைஇனி அல்வழிக்கண், குருடு கடிது, களிறு கடிது என்றாற் போலஇயல்பாகும். (425 நச்.)