ஞெமை என்ற சொல் புணருமாறு

ஞெமை என்ற மரத்தை உணர்த்தும் பெயர் அல்வழிப் புணர்ச்சியில்நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.எ-டு : ஞெமை கடிது, சிறிது, தீது, பெரிது; ஞெமை ஞான்றது,நீண்டது, மாண்டது; ஞெமை யாது, வலிது; ஞெமை யழகிது. (யகரம்உடம்படுமெய்) (தொ. எ. 158 நச்.)வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், சே என்ற மரப்பெயர் போல, வன்கணம்வருவழி இனமாகிய மெல்லெழுத்து மிக்கும், ஏனைக்கணம் வருவழி இயல்பாகவும்புணரும்.எ-டு : ஞெமைங்கோடு, ஞெமைஞ்செதிள், ஞெமைந் தோல், ஞெமைம்பூ;ஞெமைஞாற்சி, நீட்சி, மாட்சி; ஞெமை யாப்பு, வன்மை; ஞெமையருமை (யகரம்உடம்படு மெய்) (282 நச்.)