ஞகர நகர ஈறுகள் உருபேற்குமாறு

ஞகர ஈற்றுச்சொல் உரிஞ் ஒன்றே; நகர ஈற்றுச் சொற்கள் பொருந் வெரிந்என்னும் இரண்டே. உரிஞ் – தேய்த்துக் கொள்; பொருந் – ஒப்பிடு; வெரிந் -முதுகு என்னும் பொருளன.இச்சொற்கள் உருபேற்கையில் இடையே இன்சாரியை பெறுவன. (உரிஞ், பொருந்என்னுமிவை தொழிற்பெயர்ப் பொருளவாய் உருபொடு புணரும்).எ-டு : உரிஞினை, உரிஞினால்; பொருநினை, பொரு நினால்; வெரிநினை,வெரிநினால் (தொ. எ. 182 நச்)ஆயின் இவை ஐந்தாம் உருபாகிய இன்னொடு பொருந்த மாட்டா. இவ்வுருபுஇச்சொற்களோடு இணையுமிடத்து இன்சாரியை இடையே வாராது. உரிஞின்,பொருநின், வெரிநின் என ஐந்தனுருபோடு இச் சொற்கள் வருமாறு காண்க.உரிஞினின், பொருநினின், வெரிநினின் என இடையே சாரியை புணர்தல் மரபன்று.(131 நச்.)