ஞகர ஈற்றுப் பெயர் உரிஞ் என்ற ஒரு சொல்லே. இஃது உருபேற்கு மிடத்துஇன் சாரியை பெறும். அல்வழிக்கண்ணும் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்ணும் உகரம் பெற்று, வருமொழி வன்கணம் வரின்வலிமிக்கும், ஏனைய கணங்களுள் மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வரின்உகரம் மாத்திரம் பெற்றும், யகரமும் உயிரும் வரின் இயல்பாகவும்புணரும்.எ-டு : உரிஞுக் கடிது; உரிஞு ஞான்றது, உரிஞு வலிது, உரிஞ் யாது,உரிஞரிது; உரிஞுக்கடுமை; உரிஞுஞாற்சி, உரிஞுவலிமை; உரிஞ் யாப்பு,உரிஞருமை – என இருவழியும் முடிந்தவாறு. (தொ. எ. 296, 297 நச்.)உரிஞ் முன்னிலை ஏவலொருமை வினையாகுமிடத்து, வருமொழி வன்கணம் வரின்உகரம் பெற்று வல்லெழுத்தோடு உறழ்ந்தும், மென்கணமும் இடைக்கணத்துவகரமும் வரின் உகரம் மாத்திரம் பெற்றும், யகரமும் உயிரும் வரின்இயல்பாகவும் புணரும்.எ-டு : உரிஞு கொற்றா, உரிஞுக் கொற்றா; உரிஞு நாகா, உரிஞு வளவா;உரிஞ் யவனா, உரிஞனந்தா என முறையே புணருமாறு காண்க. (152 நச்.உரை)