நிலைமொழி வருமொழி ஆகியவற்றினிடையே சாரியை வந்து புணரும். அச்சாரியைபெறும் புணர்மொழிகளைப் பிரித்து நிலைமொழி வருமொழி சாரியை என்றுபகுத்துக் காண்டலே சொற்சிதர் மருங்காகும்.எ-டு : விளவின்கோடு என்பது புணர்மொழி. இதன்கண், விள – நிலைமொழி;கோடு – வருமொழி; இன் – சாரியை. இவ்வாறு பகுத்துக் காண்டல் இது. (தொ.எ. 132 நச்.)