சேலூர்

பெரிய புராணம் சம்பந்தர் வழிபட்ட ஊர்பற்றிய பாடல்களுள், அவரது சேலூர் வழிபாடு பற்றியும் இயம்புகிறது. புள்ளமங்கைப் பதியில் உள்ள ஆலந்துறை கோயிலை அணைந்து.
மன்னும் அக்கோயில் சேர்மான்மறிக் கையர் தம்
பொன்னடித் தலம் உறப்புரி வொடும் தொழுதெழுந்
தின்னிசைத் தமிழ் புனைந்திறைவர் சேலூருடன்
பன்னுபாலைத் துறைப்பதி பணிந்தேகினார் (34-364)
எனவே ஆலந்துறை கோயிலுக்கும் பாலைத்துறைக்கு கோயிலும் இடைப்பட்டு இக்கோயில் இருந்தது என்பதை உணர முடிகிறது. புள்ளமங்கைப் பதியும், பாலைத்துறையும் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைவதால் இக்கோயிலும் தஞ்சையைச் சார்ந்த பகுதியிலேயே இன்றும் காணப்படும் எனலாம்.